என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தம்பிதுரை, அன்புமணிக்கு வாழ்த்துகள் தெரிவித்த டி.டி.வி. தினகரன்
- நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை
- தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியிட்டு தேர்வாகியுள்ளனர். இருவருக்கும் டி.டி.வி. தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தம்பிதுரைக்கும், பா.ம.க. தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்-க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டுள்ளார்.






