என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருநங்கையர்களுக்கு தனிகொள்கை தேவை- சவுமியா அன்புமணி
    X

    திருநங்கையர்களுக்கு தனிகொள்கை தேவை- சவுமியா அன்புமணி

    • தனிக்கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
    • வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் சவுமியா அன்புமணி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநங்கையர்கள், திரு நம்பியர் மற்றும் இடை பாலினத்தவரின் சமூக அங்கீகாரத்திற்கும், வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை. இதை உணர்ந்து திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடை பாலினத்தவருக்கு தனிக்கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வரும் 17-ந் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    Next Story
    ×