என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live Updates
- 17 Feb 2026 12:28 PM IST
496 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
- 17 Feb 2026 12:28 PM IST
தமிழ்நாடு அரசின் வேளாண் காடுகள் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு
- 17 Feb 2026 12:22 PM IST
துவரை சாகுபடி விரிவாகக் இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி- அமைச்சர்
- 17 Feb 2026 12:21 PM IST
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.175 கோடி நிதி பெற்றுள்ளனர்.
- 17 Feb 2026 12:21 PM IST
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி பரப்பளவு 1.33 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
- 17 Feb 2026 12:20 PM IST
பழம், காய்கறி பரப்பு சாகுபடியை விரிவாக்கம் செய்ய அரசு ஊக்குவிக்கிறது- அமைச்சர்
- 17 Feb 2026 12:19 PM IST
விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்ய 77,000-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ளது.
- 17 Feb 2026 12:19 PM IST
கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு- அமைச்சர்








