என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இதுதான் இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு தமிழ்நாடு ஆற்றும் எதிர்விணை: சு. வெங்கடேசன் எம்.பி.
- எம்.பி.க்கள். இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில்தான்.
- இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இப்போதுதான்.
தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து சு. வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில்தான். அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில்தான்.
இதுதான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்விணை.
இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
Next Story






