என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியில் LIC இணையதள பக்கம்- வாடிக்கையாளர்கள் குழப்பம்
- எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி.
- தொழில்நுட்ப கோளாறால் ஆங்கில மொழியை தேர்வு செய்யும் இடத்தில் கூட இந்தியில் உள்ளதாக எல்.ஐ.சி. தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம் முழுவதுமாக இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததும் மட்டுமில்லாமல் மொழி தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் எல்.ஐ.சி.யின் முகப்பு பக்கம் ஆங்கிலத்தில் மாறியது.
இந்தி, ஆங்கிலம் என மாறிக்கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் பக்கம் அவ்வாறு தோன்றியது என எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது.
Next Story






