என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • தெருவில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.
    • சிறுமியை திடீரென துரத்தி வந்த நாய், அவரது முகத்தில் கடுமையாக கடித்து குதறியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டி கிராமம் உள்ளது.

    இந்த பகுதியில் உள்ள தெருவில் இன்று காலை 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.

    அப்போது அங்கு சிறுமியை திடீரென துரத்தி வந்த நாய், அவரது முகத்தில் கடுமையாக கடித்து குதறியது. இதில் சிறுமியின் நெற்றி, உதடு மற்றும் மூக்கு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி விட்டு, படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக மீட்டனர்.

    சிறுமிக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×