என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#SpecialTrain திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
- இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது நாளை (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நண்பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும். மறுமார்க்கமாக பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.






