என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சப்தகிரி ரெயில் மாற்றியமைப்பு: வருகிற 20-ந்தேதி முதல் இயக்கம்
    X

    நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சப்தகிரி ரெயில் மாற்றியமைப்பு: வருகிற 20-ந்தேதி முதல் இயக்கம்

    • 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.
    • தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை - திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 1976-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த ரெயில் சென்னை - திருப்பதி இடையேயான 145 கி.மீ. தூரத்தை 3.30 மணி நேரத்தில் சென்றடைகிறது.

    இந்த ரெயில் தினமும் 4 சேவைகள் இயக்கப்படுகிறது. 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஏற்கனவே இழுவை ரெயில் என்ஜின் இணைக்கப்பட்டு இருந்தது. இப்போது ராஜ்தானி மற்றும் வந்தே பாரத் ரெயிலில் இருக்கும் இந்த அம்சங்கள் கடந்த 1990-ம் ஆண்டு காலகட்டத்திலேயே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்தது. ரெயில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைப்பதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்பிறகு கடந்த 2016-2017-ம் ஆண்டு இழுவை ரெயில் என்ஜின் அகற்றப்பட்டு வழக்கமான ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரெயில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன வசதிகளை கொண்ட சப்தகிரி ரெயிலில் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, 4 பொதுப்பெட்டிகள், மாறுத்திறனாளிகள் செல்லும் வகையிலான ஒரு பெட்டி ஆகியவையும் அடங்கும்.

    சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெட்டிகளை கொண்ட நவீன சப்தகிரி ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    Next Story
    ×