என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் சைபர் குற்றங்கள் மூலம் கடந்த 7 மாதங்களில் ரூ.49 கோடி மோசடி
- கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
- சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
கோவை:
இணைய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாக் அவுட் டிஜிட்டல் மோசடி எனும் விழிப்புணர்வு இயக்கத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.
அதன்படி கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நகரை பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. இதில் இருந்து தப்பிக்க எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருக்க வேண்டும். சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் மோசடியால் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியாளர்களிடம் இருந்து ரூ.14 கோடியை மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
இதில் சைபர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பிரவீன்குமார், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தன், அஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






