அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 23 மாவட்டங்கள்...

பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 23 மாவட்டங்கள்...
Published on

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com