ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதை காணலாம்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதை காணலாம்.
Published on

ஒகேனக்கல்:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

5-வது நாளாக நேற்று கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடி எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக திறக்க ப்பட்டுள்ளது.

இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 420 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 29 ஆயிரத்து 256 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 24 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறு, அருவியில் குளிக்க 7- நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து ள்ளது. 6 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறை களுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர்.

சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பி ட்டு மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com