

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.