என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் பொன்முடி வழக்கு- இறுதி விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
- ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என நீதிபதி கருத்து.
- ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என கேள்வி.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை துவக்கப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டோர் விளக்கத்தை கேட்காமல் வழக்கை மாற்றியதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் பொறுப்பாகமாட்டார் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதாவது, அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா ? என்றார்.
ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் பொன்முடி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.






