என் மலர்
தமிழ்நாடு
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,976 கன அடியாக குறைந்தது
ByMaalaimalar29 Nov 2024 10:08 AM IST
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 5,110 கன அடியிலிருந்து 3,976 கன அடியாக சரிந்தது.
- 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் நீர்மட்டம் 110.20 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 5,110 கன அடியிலிருந்து 3,976 கன அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் நீர்மட்டம் 110.20 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 78.69 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Next Story
×
X