என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க மாட்டோம் - சிபிஎம்
- சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வின் வேட்பாளர்.
- தமிழ் நாட்டுக்காரர் என்பதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவர் பா.ஜ.க.வின் வேட்பாளர். அவரை தேர்வு செய்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை. அவர் தமிழ் நாட்டுக்காரர் என்பதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவருக்கு அதிகாரம் எதுவும் கிடைக்கப் போவது இல்லை. அதனால் தமிழகத்துக்கு பலன் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






