என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யாவில் இருந்து எரிகோல்கள் வந்தது
- கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.
- அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.
இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் இயங்கி வருகிறது. இதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த அணு உலையில் எரிக்க பயன்படுத்தும் எரிகோல்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் எரிகோல்கள் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று 3 கண்டெய்னர் லாரிகளில் எரிகோல்கள் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் வந்தடைந்தது.
அங்கு அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.






