என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விடுப்பு - புதிய நியமனம்!
- பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார்
- கூடுதலாகத்தான் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் சங்கர் ஜிவால். இவர் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கட்ராமனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த உடல்நிலை குறைவு காரணமாக அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் இருப்பதால் அபய்குமார் சிங்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார் என அரசு தெரிவித்துள்ளது.
அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாகத்தான் இந்த டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் தடுப்பு பிரிவையும் அவர் கவனித்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராமன் விடுமுறை முடிந்து திரும்பும்போது பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






