என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    • மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 19-ந்தேதி அதிகாலை தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திராவில் கடற்கரைகளை கடக்கும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற 19-ந்தேதி தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும்.

    காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×