என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 57,000 கன அடியாக உயர்வு
- ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.






