என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர்களுக்கு கவர்னர் வாழ்த்து
- சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
- புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும்.
சென்னை:
'பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிறந்த தமிழ் நாவல் "ஒற்றை சிறகு ஓவியா" படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான பால சாஹித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் தனது அற்புதமான தமிழ் சிறுகதை தொகுப்பான "கூத்தொன்று கூடிற்று மற்றும் பிற கதைகள்" என்ற படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு தேர்வாகியுள்ள லட்சுமிஹர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
இந்த மதிப்புமிக்க விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்கி, புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.






