வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
Published on

சென்னை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,737.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,789-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

தலைநகர் டெல்லியில் ரூ.1,580, கொல்கத்தாவில் ரூ.1,684, மும்பையில் ரூ.1531.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com