என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
- தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது.
சென்னை:
முன்னாள் ஒன்றிய உள்துறை மந்திரியும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர், மக்களவைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர்.
தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.






