என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் பூக்கள் விலை சரிந்தது: மல்லிகை கிலோ ரூ.320, முல்லை ரூ.200-க்கு விற்பனை
    X

    சேலத்தில் பூக்கள் விலை சரிந்தது: மல்லிகை கிலோ ரூ.320, முல்லை ரூ.200-க்கு விற்பனை

    • சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக திருமண நிகழ்ச்சிகள், பல்வேறு விஷேசங்கள் மற்றும் திருவிழாக்களையொட்டி தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில மாதங்களாக ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த குண்டு மல்லிகை இன்று கிலோவுக்கு ரூ.900 வரை விலை குறைந்து ரூ.320 என விற்கப்பட்டு வருகிறது.

    அதே போல கடந்த காலங்களில் ரூ.600-க்கு விற்ற முல்லை பூ ரூ.400 வரை விலை குறைந்து இன்று ரூ.200 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-

    மல்லிகை-ரூ.320, முல்லை-ரூ.200, ஜாதி மல்லி, காக்கட்டான்-ரூ.160, கலர் காக்கட்டான்-ரூ.100, மலை காக்கட்டான்-ரூ.160, ஏற்காடு மலை காக்கட்டான்-ரூ.160, சம்மங்கி-ரூ.20, சாதா சம்மங்கி-ரூ.50, அரளி-ரூ.100, வெள்ளை அரளி-ரூ.100, மஞ்சள் அரளி-ரூ.160, செவ்வரளி-ரூ.160, ஐ.செவ்வரளி-ரூ.120, நந்தியா வட்டம்-ரூ.300, சின்ன நந்தியா வட்டம்-ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எதிர்வரும் வைகாசி, ஆனி மாதங்களில் முகூர்த்த நாட்கள் வருவதால் அந்த சமயத்தில் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×