என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுபோதையில் தகராறு: பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம்- மகனை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
    X

    மதுபோதையில் தகராறு: பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம்- மகனை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

    • மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
    • நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து ரகளையில் ஈடுபடுவதுடன் சில பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம்.

    அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் மன்மதன். பன்றி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி. இவர்களது மகன் ஸ்ரீதர் (வயது 31). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி குடும்ப தகராறில் ஏற்கனவே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள படுக்கையில் ஸ்ரீதர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை. தாய் கல்யாணி செங்குன்றம் அருகே உள்ள அவரது மகள் வீட்டிலும், தந்தை மன்மதன் இறைச்சி வியாபாரத்திலும் இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மன்மதனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மகன் ஸ்ரீதரை கழுத்தை அறுத்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்கு மன்மதனின் மனைவி கல்யாணியும் உடந்தையாக இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து மன்மதன், அவரது மனைவி கல்யாணி ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் ஜமிஸ் பாபு மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கொலையுண்ட ஸ்ரீதர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார்.

    மேலும் நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து ரகளையில் ஈடுபடுவதுடன் சில பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தபோது அடிக்கடி அடித்து உதைத்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் தனது பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகன் என்றும் பாராமல் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    சம்பவம் நடந்தபோது தாய் கல்யாணி வீட்டின் வெளியே நின்றதாக தெரிகிறது. பின்னர் மகன் உடலை வீட்டிலேயே வைத்து கதவை பூட்டிவிட்டு மன்மதன் தனது மனைவி கல்யாணியை செங்குன்றத்தில் உள்ள மகள் வீட்டில் விட்டுவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தார். அன்று இரவு மன்மதன் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே உள்ள இறைச்சி கடையில் தங்கி விட்டு மறுநாள் காலையில் வழக்கம் போல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    போலீசார் சந்தே கத்தின்பேரில் மன்மதனை பிடித்து விசாரித்த போதுதான் அவர் மகனை கழுத்தை அறுத்து கொன்றது தெரிந்தது. மேலும் மகன் கொலை குறித்து கல்யாணியும் வெளியில் சொல்லாமல் இருந்தார். இதனால் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    Next Story
    ×