என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல் எச்சரிக்கை - டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை
- டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி டிட்வா புயல் நாளை மறுதினம் காலை வரும்.
டிட்வாக புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் புதுச்சேரிக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.






