என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னைக்கு 560 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் - மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
    X

    சென்னைக்கு 560 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் - மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

    • கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
    • ராமேஸ்வரத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயல் சென்னைக்கு 560 கி.மீ. தூரத்திலும் புதுச்சேரிக்கு 460 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. வரும் 30-ந்தேதி அதிகாலை வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியாக செல்ல இருந்த அனைத்து ரெயில்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.

    தொடர்மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×