என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
- குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை முதல் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






