என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
மறைந்த நடிகர் ஏம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுடைய மனைவி கீதா ராதா மறைவுக்கு இழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story






