கிண்டி போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர்.புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.
கிண்டி போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது
Published on

சென்னை:

சி.ஐ.டி.யு. சென்னை மாவட்டம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது. கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தலைவர் கபாலி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தேவாரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது.

13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை உடனே நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர். புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.

இதற்கிடையில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் போலீசார் கைது செய்தாலும் போராட்டம் நீடிக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com