என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரம்பலூரில்  தனிமையில் இருந்தவர்களை தாக்கி காதலன் கண்முன்னே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள்
    X

    பெரம்பலூரில் தனிமையில் இருந்தவர்களை தாக்கி காதலன் கண்முன்னே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள்

    • பாடாலூர் அருகே காதலர்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்.
    • அங்கு வந்த வாலிபர்கள் காதலர்கள் மீது தாக்குதல் நடத்தி, இளம் பெண்ணுக்கு பாலியல தொல்லை கொடுத்தனர்.

    பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் அவரது காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, பாடாலூர் அருகே காரை கிராமத்திற்கு சென்றிருந்தார். பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்.

    இதனை கண்காணித்து பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் சிலர் தனிமையில் இருந்த காதலர்களை மிரட்டி தாக்கி, அந்த பெண்ணிடம் காதலன் கண் முன்னே பாலியியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது காதலியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சொந்த ஊர் சென்ற வாலிபர் நடந்ததை தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் அவர்களுடன் பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று வாலிபர் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த ரோந்து போலீசார் அவர்கள் அனைவரையும் பிடித்து, பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது காரை கிராமத்தில் தனது காதலியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்து ஒரு கும்பல் தாங்கள் இருவரையும் தாக்கி, மிரட்டி தனது கண் முன்னே தனது காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனால் நண்பர்கள் சிலருடன் அவர்களை தேடிவந்தபோது ஒருவன் மட்டும் கண்ணில் தென்பட்டதால் அவனை பிடித்து தாக்கியதாகவும் அந்த வாலிபர் தெரிவித்தார்.

    ஆனால் தனது காதலி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். அவரைப் பற்றிய விவரம் தெரிய வந்தால் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு பெருத்த அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டு விடும் என்பதால், போலீசாரை அணுகாமல், தனது காதலியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்களை நண்பர்கள் சிலர் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், புகார் அளிக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனால், குழப்பமடைந் துள்ள பாடாலூர் போலீசார் உயர் அதிகாரிகளின் அறிவு றுத்தலின் பேரில், சந்தேகத திற்கிடமாக மூன்று வாலிபர் களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் பேசிக் கொண் டிருந்த போது காதலன் கண்முன்னே இளம்பெண் ஒருவர் வாலிபர்கள் சில ரால் பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட சம்பவம் பாடாலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×