என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு
    X

    கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு

    • சிபிஐ விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் .
    • கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உத்தரவிட்டதுபோன்று, உத்தரவிட வேண்டும்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி இருந்த நிலையில் அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இந்நிலையில் சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பொற்கொடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ அதேபோல தனது கணவர் கொலை வழக்கிலும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×