என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
    • பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி அங்கிருந்து பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார்.

    Next Story
    ×