என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர்-நாகர்கோவில் இடையே செல்லும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
- பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.
- தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சேவை தொடங்கப்பட்டபோது 8 பெட்டிகள் மட்டுமே இருந்தது. பின்னர் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க எழும்பூர்-நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 20 பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.
வரும் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






