என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு முன் ஜாமீன்
    X

    கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு முன் ஜாமீன்

    • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கு முன் ஜாமீன்.
    • சேலம் டவுன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை.

    கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மக்களை சந்திக்க சென்றார். அவர் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றபோது, அதை தாக்கியதாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் 8 பேருக்கும் மதுரை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. 8 பேரும் 2 வாரங்கள் சேலம் டவுன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட வேறு சிலர் ஜாமின் பெற்றுள்ளதால், 2 வாரங்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கௌதம் தனசேகர், அன்புமணி, செந்தில் குமார், சுப்ரமணி ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.

    Next Story
    ×