என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்- தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
- 5 மாநில தேர்தலுக்காக மொத்தம் 25 லட்சம் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள்.
- அசாமில் 31,486, கேரளாவில் 30,471, தமிழ்நாட்டில் 75,032, மேற்கு வங்காளத்தில் 80,719, புதுச்சேரியில் 1,099 வாக்குச்சாவடிகள் இருக்கும்.
புதுடெல்லி:
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான விரிவான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
அதன்படி இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக மேற்கு வங்காளத்தில் 6.4 கோடி பேர், தமிழ்நாட்டில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி, புதுச்சேரியில் 9.44 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 5 மாநிலங்களிலும் மொத்தம் 2,18,807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இதில் அசாமில் 31,486, கேரளாவில் 30,471, தமிழ்நாட்டில் 75,032, மேற்கு வங்காளத்தில் 80,719, புதுச்சேரியில் 1,099 வாக்குச்சாவடிகள் இருக்கும்.
5 மாநில தேர்தலுக்காக மொத்தம் 25 லட்சம் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் தேர்தல் அதிகாரிகள் 15 லட்சம், பாதுகாப்பு படையினர் 8.5 லட்சம், நுண் பார்வையாளர்கள் 49,000, தேர்தல் பார்வையாளர்கள் 1,444, வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் 40,000, துறை அதிகாரிகள் 21,000, வாக்கு எண்ணிக்கை நுண் பார்வையாளர்கள் 15,000 ஆகியோர் அடங்குவர்.
சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இவர்கள் உதவுவார்கள் என ஞானேஷ் குமார் தெரிவித்தார்.






