என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2025-ல் தமிழகத்தில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு. 28 பேர் பலி
    X

    2025-ல் தமிழகத்தில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு. 28 பேர் பலி

    • கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.
    • 2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் இதுவரை நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.

    2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

    2022 இல் 3.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு ரேபிஸ் தொற்றுக்கு 28 பேர் இறந்துள்ளனர். 2021 இல் 3.19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 19 பேர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×