என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 4 பேர் கைது- போலி ஆதார் கார்டுகள் பறிமுதல்
- கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
- முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி முத்துநகர், மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷேரீப், ஷோகாக், லீட்டன், ரகீர் ஆகியோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






