என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து 2 பெண்கள் பலி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்
- வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியான சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பலியானவர்கள் குடும்பத்திற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .
இத்தகவல் அறிந்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்த வீட்டினை பார்வையிட்டார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதி முழுவதும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது தி.மு.க.ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், தாசில்தார் மகேஷ் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியான சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






