என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு- அமைச்சர் தகவல்
    X

    அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு- அமைச்சர் தகவல்

    • தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

    சென்னை:

    தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 20 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுப்பெற்றுள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு 2,106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

    மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகச் சிரத்தையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு அவர்களின் உரிமைகளைக் காப்பதிலும், அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு தோழனாய் பாதுகாவலனாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×