என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடையில் நூதன முறையில் நகை திருடிய இளம்பெண்- கண்காணிப்பு கேமராவில் பதிவு
- கடையில் உள்ள நகையை சரிபார்த்தபோது 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.
- இளம்பெண் நூதன முறையில் நகையை திருடி சென்று உள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரி தேரடி தெருவில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு காலை இளம்பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்தார்.
நீண்ட நேரம் நகையை பார்த்து கொண்டு இருந்த அவர் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள டிசைன்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடையில் உள்ள நகையை சரிபார்த்தபோது 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நகை வாங்குவதுபோல் நடித்த இளம்பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஒரு நகையை தனது சேலையில் மறைத்து திருடி செல்வது பதிவாகி இருந்தது. காலை நேரத்தில் கடையில் கூட்டம் இல்லை. எனினும் இளம்பெண் நூதன முறையில் நகையை திருடி சென்று உள்ளார்.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






