என் மலர்

  தமிழ்நாடு

  கர்ப்பிணி பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
  X

  கர்ப்பிணி பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீராம் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
  • ஸ்ரீராம் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் புகார் அளித்தார்.

  சென்னை:

  சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம். 22 வயது வாலிபரான இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

  இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் 24 வயது கர்ப்பிணி பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஸ்ரீராம் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் புகார் அளித்தார்.

  இதையடுத்து அவர் தனது நண்பர்கள் இருவரை வரவழைத்தார். அதற்குள் வீடியோ எடுத்த ஸ்ரீராம் எதுவும் தெரியாதது போல தனது வீட்டில் போய் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணின் கணவரும் அவரது நண்பர்களும் செல்போனுடன் ஸ்ரீராமை மடக்கி பிடித்தனர்.

  இதையடுத்து ஸ்ரீராமை குமரன் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீராம் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீராம் இதுபோன்று வேறு பெண்களையும் வீடியோ எடுத்துள்ளாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×