என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆற்றை கடந்து யானை வனப்பகுதிக்குள் செல்வதை காணலாம்
கிருஷ்ணகிரியில் கடந்த 3 நாட்களாக அட்டகாசம்- காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் டோல்கேட் அருகே சுற்றிதிரிந்தது.
ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டு இருந்தது.
நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.