என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் தண்ணீர் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட காட்சி.
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் தண்ணீர் இல்லாமல் வெறிச்சோடியது
- மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை தொட்டதும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை தொட்டதும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
மேலும் இந்த தண்ணீரை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story






