என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பறக்கும் படையினருக்கு அதிரடி உத்தரவிட்ட கலெக்டர்
- பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், "நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் வாகன சோதனை நடத்துங்கள்" என்று தேர்தல் பறக்கும் படைக்கு உத்தரவிட்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி ஆய்வு செய்தார். அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாகன சோதனையின்போது நேர்மையுடனும், கணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அதேநேரத்தில் எந்தவித பாரபட்சமும் பாராமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளும்படியும், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.






