என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்- சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால அறிக்கை தாக்கல்
- 191 சாட்சிகளிடம் விசாரணை, சந்தேகிக்கும் 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
- 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி சத்திய நாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 191 சாட்சிகளிடம் விசாரணை, சந்தேகிக்கும் 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை மந்த கதியில் இருப்பதாக நீதிபதி சத்திய நாராயணன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
Next Story






