என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: கவர்னர் 30-ந்தேதி கொடைக்கானல் செல்கிறார்
- கவர்னர் கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோகினூர் சேக் அப்துல்லா மாளிகையில் தங்குகிறார்.
- வர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு இப்பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வருகிற 31-ந் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி அவர் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார்.
கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோகினூர் சேக் அப்துல்லா மாளிகையில் அவர் தங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் கோகினூர் மாளிகையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக கொடைக்கானலுக்கு வரும் முதலமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலரும் கோகினூர் மாளிகையில் தங்குவது வழக்கம். அதன்படி வருகிற 30-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி தங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவி வருவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு இப்பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி புதிய டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மின்வாரிய செயற்பொறியாளர் முருகேசன், தாசில்தார் முத்துராமன் ஆகியோர் செய்தனர்.






