என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

5 மாவட்டங்களில் இலவச Wifi சேவை: தமிழக பட்ஜெட்டில் தகவல்
- குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது.
- விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் குறிப்பிட்டுள்ள முக்கியம்சங்கள்:-
* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் Wifi சேவை வழங்கப்படும்.
* குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது
* சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
* விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்
* மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
* தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள்
* தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ. 120 கோடியில் அமைக்கப்படும்
* விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
* கோவையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்






