என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை சட்டசபை மீண்டும் கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Live Updates
- 9 Jan 2023 10:38 AM IST
2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.28 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
- 9 Jan 2023 10:35 AM IST
தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
- 9 Jan 2023 10:33 AM IST
குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது
- 9 Jan 2023 10:31 AM IST
கிராமப்புற பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- 9 Jan 2023 10:29 AM IST
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது.
- 9 Jan 2023 10:28 AM IST
மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது- ஆளுநர்
- 9 Jan 2023 10:27 AM IST
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி உள்ளது - ஆளுநர்
- 9 Jan 2023 10:07 AM IST
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தமிழில் கூறி, ஆளுநர் தனது உரையை தொடங்கினார்






