என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை
    X

    மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

    அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை சட்டசபை மீண்டும் கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.

    ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Live Updates

    • 9 Jan 2023 10:06 AM IST

      ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    • 9 Jan 2023 10:05 AM IST

      ஆளுநர் ஆர்.ரவி. சட்டசபைக்கு வந்ததும் சபையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் வணக்கம் தெரிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. 

    • 9 Jan 2023 10:00 AM IST

      ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை. ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    • 9 Jan 2023 9:59 AM IST

      சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை

    • 9 Jan 2023 9:49 AM IST

      சட்டசபை வளாகத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

    • 9 Jan 2023 9:48 AM IST

      காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ய முடிவு செய்துள்ளன. 

    • 9 Jan 2023 9:44 AM IST

      2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது

    Next Story
    ×