என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்களை பிரித்தெடுக்கும் புதிய எந்திரத்தை அறங்காவலர் குழு தலைவர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ.2.48 கோடி வருவாய்
- சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- உபயதாரரால் வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்களை பிரித்தெடுக்கும் புதிய எந்திரத்தை தலைவர் அருள் முருகன் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை நேற்று காலை காவடி பிறை மண்டபத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் எண்ணப்பட்டது.
சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரத்து 869-ம், தங்கம் 1168 கிராம், வெள்ளி 17,300 கிராம், பித்தளை 83 ஆயிரம் கிராம், செம்பு 14 ஆயிரம் கிராம், தகரம் 2 ஆயிரத்து 500 கிராம் மற்றும் அயல் நோட்டு 491-ம் இருந்தது.
உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, எட்டையபுரம் ஆய்வாளர் சண்முகராஜா, பொதுமக்கள் பிரதிநிதி வேலாண்டி ஓதுவார், மோகன், கருப்பன், அயல் பணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக, உபயதாரரால் வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்களை பிரித்தெடுக்கும் புதிய எந்திரத்தை தலைவர் அருள் முருகன் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.






